Thursday, June 10, 2010

என் இனிய பொன் நிலாவே!

என்னை விட்டு செல்லாதே என்றும்...


உன்னை மறக்க முடியாத ஜீவன் நான் இன்றும்!

கை கழுவி விட்ட காலங்கள் கண்களுக்குள்ளே மறையவில்லை...
கை கழுவி விட்ட காலங்கள் கண்களுக்குள்ளே மறையவில்லை...
உன்னை கை கழுவி விட எண்ணும் எவனுக்கும் இங்கு வாழ தகுதி இல்லை!

நீ என் பெயரை அழைக்கும் அந்த நொடி மீண்டும் மீண்டும் கேட்கிறது என் செவியில்...
அதை மீண்டும் மீண்டும் கேட்பதற்காகவே வராமல் நின்றேன் உன் எதிரில்!

கிடைத்ததோ ஒன்றே ஒன்று..
கிடைத்ததோ ஒன்றே ஒன்று..
அதையும் நான் உண்ண தந்தாயே அன்று!

உன் முத்தத்திற்கு இவ்வுலுகம் ஈடாகுமா?
கண்ணே! உன் முத்தத்திற்கு இவ்வுலுகம் ஈடாகுமா?
உன் மூச்சு காற்றை எனக்குள் அடக்கி வைத்தல் சாத்தியமா?
செல்லமே! என்றும் உன் மூச்சு காற்றை எனக்குள் அடக்கி வைத்தல் சாத்தியமா?

மனதில் சுமந்தாய் என்னை தினமும்...
மனதில் சுமந்தாய் என்னை தினமும்...
என் இனிய பொன் நிலாவே!!
உன் கருவறையில் பத்து மாதம் சுமந்தாயே!
உன் கருவறையில் என்னை பத்து மாதம் சுமந்த என் தாயே!!
என்ன கைம்மாறு செய்ய போகிறேன்..
வருந்திகிறேன் தினமும்!

No comments: